முத்தலாக் மசோதாவை ராஜ்ய சபாவில் வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 08:29 pm
we-will-defeat-triple-talaq-in-rajya-sabha-congress

நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் அதை நிறைவேற்ற விட மாட்டோம் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக்கும் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு சட்டம் மீது, கடந்த வியாழனன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், 245 வாக்குகளை பெற்று மசோதா நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு இதை நிறைவேற்ற போதிய பலம் இல்லை. இருந்தாலும் நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

மசோதாவிற்கு போதிய ஆதரவு உள்ளதாக அமைச்சர் பிரசாத் கூறினாலும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மசோதாவை வீழ்த்த மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கூட்டணியில் இல்லாத அதிமுக உள்ளிட்ட கட்சிகளே முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், நாளை மாநிலங்களவையில் நிச்சயம் இதை வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close