மேகாலயா சுரங்க மீட்பு: கடற்படையினர் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 05:55 am
meghalaya-trapped-miners-navy-struggling-in-rescue

மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பணியாளர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 6 கடற்படை வீரர்கள் தண்ணீருக்குள் சென்று பணியாளர்களை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி மேலும் சிக்கலை சந்தித்துள்ளது.

மேகாலயாவின் ஜெயந்தியா மலைகள் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 15 சுரங்கப் பணியாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 370 அடிக்கும் ஆழமான அந்த சுரங்கத்தில் பல்வேறு பாதைகள் உள்ளதால் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மிகவும் கடினமானது. 16வது நாளாக மீட்பு பணிகள் நேற்று நடைபெற்ற வரும் நிலையில், சிக்கிய சுரங்கப் பணியாளர்கள் இருக்கும் இடத்தை இன்னும் மீட்பு படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுரங்கத்தில் இருக்கும் வெள்ள நீரை வெளியேற்ற அதிநவீன பம்புகள் நேற்று கொண்டுவரப்பட்ட நிலையில், கடற்படை வீரர்கள் சுரங்கத்தின் உள்ளே சென்றதால் அதை தற்காலிகமாக இயக்க முடியாமல் போனது. 

கடற்படையில் இருந்து வந்த ஆறு வீரர்கள், சுரங்கத்திற்குள் இறங்கி அடிமட்டத்தை தேட முயற்சி செய்தனர். 70 அடி வரை சென்றும் சுரங்கத்தின் அடிமட்டத்தை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் திரும்பினர். இன்று மீண்டும் கடற்படை டைவர்கள் முயற்சி எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை, தீயணைப்பு படை என பல்வேறு துறைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 10 பம்புகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நாளை அவற்றை தண்ணீருக்கடியில பொருத்தி வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பம்புகள், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close