இந்த ஆண்டில் 311 தீவிரவாதிகளை போட்டுத் தள்ளிய ராணுவம்

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 12:41 pm
army-neuralised-311-terrorists-in-this-year

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம், துணை ராணுவம், மாநில காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்த ஆண்டில் மொத்தம் 311 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். அதே சமயம், தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 80 பேர் பலியாகியிருக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் அல்லது அவர்களது ஆதரவுடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தீவிரவாதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2018ம் ஆண்டில் மொத்தம் 311 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக லெப்டினெண்ட் ஜெனரல் அனில் குமார் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றவர்களில் 91 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் தொடங்கி 80 நாள்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மிக அதிகமாக இருந்தது. இந்த நாட்களில் மட்டும் 81 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

கடந்த ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை 342க இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 429க அதிகரித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் 240 தீவிரவாதிகள் களத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close