விளையாட்டு வீரர்கள் சாதனைகள் செய்ய வேண்டும்- மோகன் பகவத்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 05:17 pm
sportsmen-should-make-great-achievements-mohan-bhagavat

விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் உலகளவில் பெரிய பெரிய சாதனைகளை செய்ய வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசு என்பதை உலக நாடுகள் ஒப்புக்க‌ொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் விளையாட்டு  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன் பகவத் அங்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராணுவம் போன்றே விளையாட்டு துறையை சேர்ந்தவர்களும் உலக அளவில் சாதனைகளை புரிய முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கான தீவிர பயிற்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் உலகளவில் இந்தியாவும் வல்லரசு என்பதை உலக நாடுகளும் ஒப்புக்கொள்ளும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஜார்கண்ட் முத‌லமைச்சர் ரகுபர் தாசும் கலந்து கொண்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close