‌பாகிஸ்தான் மற்றும் சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 05:21 pm
rss-leader-payaji-joshi-speaks-about-pakistan-and-china

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தியாவுடனான பகைமையை மறந்தாலே நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பையாஜி ஜோஷி, இந்தியா மீது உள்ள பகைமை உணர்வை பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிறுத்திக்கொண்டால் நம் நாட்டில் அமைதி ஏற்படும். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் காரணமாகவே நம் நாடு ராணுவத்திற்கு அதிகம் செலவிட நாே்கிறது.

இந்தியாவில் அமைதி நிலவினால் நாட்டில் உள்ள ஏழ்மை நிலை,கல்வித் தரம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அது ஏதுவாக இருக்கும். பாகிஸ்தான் மற்றும் சீனாவை இந்தியா எதிரி நாடாக எப்போதும் நினைத்ததில்லை என்றும் பையாஜி ஜோஷி அப்போது தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close