மேற்கு வங்கம்: விவசாயிகளுக்கு அதிரடி சலுகைகள் வழங்கிய மம்தா!

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 10:13 pm
west-bengal-mamata-announces-various-schemes-for-farmers

விவசாயிகளை குறிவைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல சலுகைகளை அறிவித்துள்ளார். ஏக்கருக்கு ரூ.5000 உதவித்தொகை, பயிர் காப்பீடுக்கு தவணை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மேற்கு வாங்க அரசு வழங்கவுள்ளது.

நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சினையை தலைதூக்கியுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்காக அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் விவசாயிகள் பிரச்சினை முக்கியமாக பார்க்கப்படும் என்பதால் இந்த சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்துக்கும் ரூ.5000 உதவித் தொகையாக வழங்கப்படும் என மம்தா அறிவித்துள்ளார். மேலும், பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு தவணைகளை அரசே கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். முக்கியமாக 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் பலியானால், அவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத்தை அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களின் மூலம் அம்மாநிலத்திலுள்ள 71.23 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close