ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை: ஜெட்லி

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 05:53 am
don-t-need-rbi-s-reserves-jaitley

நிதி பற்றாக்குறையை குறைக்க ரிசர்வ் வங்கியின் நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை, என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ரூபாய் 85,948.86 கோடி ரூபாய் ஒதுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ரூ.41,000 கோடி, வங்கிகளின் மறு மூலதனத்திற்க்கு ஒதுக்கப்பட்டது.

முன்னதாக, தங்களின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வந்ததாக சர்ச்சை எழுந்தது. இதை நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், மத்திய அரசும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது குறித்து பேசிய நிதியமைச்சர் ஜெட்லி, "இந்த அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை குறித்த நடவடிக்கைகள், இதற்கு முந்தைய அரசுகளை விட மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு தேவையில்லை" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close