பாதுகாப்பு முடிவுகளில் ராகுலும், சோனியாவும் தலையிட்டது இல்லை: ஏ.கே.ஆண்டனி

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 09:49 am
sonia-gandhi-rahul-gandhi-never-interfered-in-defence-deals-ak-antony

விமானஅகஸ்டாவெஸ்ட்லேண்ட் பிரச்னை பெரியளவில் உருவாகி வரும் நிலையில் ஒப்பந்தங்களில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஒரு நாளும் தலையிட்டது கிடையாது என முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.  

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் தஞ்சம் அடைந்திருந்தார். அவர்  கடந்த 4ம்   தேதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. அவரை கடந்த 29ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறை, சோனியா காந்திக்கு இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மைக்கேல் கூறியிருப்பதாக கூறியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணி கூறியதாவது: மத்திய அரசும், பாஜ.வும் நாட்டின் உயர் அமைப்புகளை பொய்களை உற்பத்தி செய்பவையாக தவறாக பயன்படுத்தி வருகிறது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்  ராணுவ ஒப்பந்தங்களில் ஒருபோதும் எந்த ஆர்வமும் காட்டியது இல்லை. தலையிட்டதும் கிடையாது. என்னுடைய பதவிக்காலம் முழுவதும் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ எந்த ராணுவ ஒப்பந்த விவகாரங்களில் தலையீடு செய்தது கிடையாது. உண்மை சிறிதளவு கூட இல்லாத நிலையில், அவர்கள் பழிதீர்க்கும் அரசியலில் ஈடுபடு முயற்சிக்கின்றனர்.

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் முறைகேடு என்ற பேச்சு எழுந்தவுடன் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. நாங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். காங்கிரஸ் எதையாவது மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்காது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close