1,400 முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 03:51 pm
pakistan-have-been-over-1-400-ceasefire-violations-on-the-loc-in-2018

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்துக்குள்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியான காரி கர்மராவில் இந்திய ராணுவ நிலைகள் மீது, பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர்.

புத்தாண்டு தினத்திலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இந்தியப் படைகள் தக்க பதிலடி கொடுத்தன. இத்தாக்குதலில் இந்திய தரப்பில் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த 2018  -ஆம் ஆண்டில் மட்டும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு -காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகள் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் 1,400 முறைக்கும் மேல் பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close