முதல்முறையாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்கள்!

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 09:48 am
two-women-devotees-bindu-and-kanakdurga-entered-offered-prayers-at-kerala-s-sabarimala-temple

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. 

அனைத்துர் வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரசினம் செய்யலாம் என்று கடந்தாண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். 

முன்னர் சில பெண்கள் சாமி தரிசனம் செய்ய முயற்சி செய்து பக்தர்கள் தடுத்ததால் திரும்பினர். இந்நிலையில் தற்போது 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவில் பம்பையில் இருந்து 3.45 மணிக்கு ஏறத்தொடங்கினர். பின்னர் தரிசனத்தை முடித்து விட்டு திரும்பினர். இவர்கள் இருவரும் 40 வயதுடைவர்கள். இவர்களுடன் போலீசார் பாதுகாப்புக்கு சென்றுள்ளனர். இவர்கள் பெயர் பிந்து மற்றும் கனக்துர்கா. இவர்களும் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கோயிலுக்கு செல்ல முயற்சித்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள பிந்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close