இனியும் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்: பினராயி விஜயன்

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 11:55 am

we-had-issued-standing-orders-to-police-to-provide-all-possible-protection-pinarayi-vijayan

இன்று சபரிமலைக்கு இரண்டு பெண்கள் சென்றதை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். 

பல தடைகளை மீறி இன்று இரண்டு பெண்கள் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி உள்ளனர். 

இதனையடுத்து கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், "இன்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்ற சாமி தரிசனம் செய்தது உண்மை தான். முன்னதாக பெண்கள் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர்கள் சென்றுள்ளனர். சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பர் என்பதை முன்பே நான் தெளிவாக கூறியுள்ளேன்" என்றார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.