ரஃபேல் விவகாரம்: கோவா அமைச்சர் பேசியதாக ஆடியோ வெளியீடு!     

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 12:59 pm
congress-releases-audio-clip-of-goa-health-minister-vishwajit-pratapsingh-rane-about-rafale

"ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களும், கோவா  முதல்வர் மனோகர் பாரிக்கர் வசம் உள்ளது" என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே பேசியதாக, ஆடியோ பதிவு ஆதாரம் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்  ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் இன்று இதனை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற கோவா  மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்வர் மனோகர் பாரிக்கர்,  "ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து தமக்கு எல்லாம் தெரியும் என்றும், அந்த ஒப்பந்த ஆவணங்களின் அனைத்து நகல்களும் தன்வசம் உள்ளது" எனக் கூறியதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close