மக்கள் உங்களை எள்ளி நகையாடுகின்றனர்: எம்.பி.க்களிடம் வெங்கய்ய நாயுடு வேதனை

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 01:05 pm
people-are-laughing-at-us-venkaiah-naidu-to-mp-s

நாடாளுமன்ற அன்றாட நிகழ்வுகளால், நாட்டு மக்கள் அவர்களின் பிரதிநிதிகளான உங்களைப் பார்த்து ஏளனமாய் சிரி்க்கின்றனர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள மிச்ச நாள்களையாவது பயனுள்ள வகையில் மாற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள்விடுத்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை தினமும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் அவை மதியம் 2 மணிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close