சபரிமலையில் பரிகார பூஜைக்கு எதிராக மனு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 01:12 pm
supreme-court-refuses-to-give-an-urgent-hearing-on-sabarimala-purification-plea

சபரிமலைக்குள் இரு  பெண்கள் நேற்று முறைகேடாக நுழைந்ததையடுத்து. சன்னிதானத்தை அடைத்து மேற்கொள்ளப்பட்ட பரிகார பூஜையானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் இன்று தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

முன்னதாக நேற்று 40 வயதுடைய இரண்டு பெண்கள் சபரிமலைக்குள்நேற்று முறைகேடாக நுழைந்தனர். அதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள அனுமதியின்  பேரிலேயே பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்துள்ளனர். இருந்தபோதிலும். தீட்டு நிகழ்ந்து விட்டதாகக் கூறி பரிகார பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் இச்செயல்  உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி மனு ஒன்றை வழக்கறிஞர் பிவி. தினேஷ் என்பவர் இன்று தாக்கல் செய்தார். மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும்,  சபரிமலை தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள ஏனைய வழக்குகளுடன் சேர்த்து இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீதும், வரும் 22ம் தேதி  விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close