காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jan, 2019 05:51 pm
kashmir-1-soldier-was-killed-in-a-landslide

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதில், ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்புப்படையினரால் மீட்டெடுக்கப்பட்டது. மற்றொரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close