இதை கவனிச்சீங்களா...? பான் கார்டு புதிய விதிமுறைகள்...!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 05:48 pm
recent-changes-in-pan-card-rules-you-must-be-aware

இந்திய வருமான வரித்துறை வழங்கும் அடையாள அட்டையான 'பான் கார்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை..

1. நம்முடைய பான் கார்டில் நம் பெயருடன் தந்தையின் பெயர் இருக்கும் அல்லது நமது பெயருக்கு கீழே தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில், வரும் காலங்களில் பான் கார்டில் நமது பெயர் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. விருப்பத்தின் பேரில் தந்தையின் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2. பான் கார்டு வாடிக்கையாளர்களில் தனி நபர்(Individual) தவிர, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், டிரஸ்ட், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என அனைத்தும் பான் கார்டு வைத்திருப்பது அவசியம். முன்னதாக ஆண்டு வருவாய் அல்லது ஆண்டு பணபரிவர்த்தனைகள் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தான் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது புதிய விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு ரூ.2,50,000க்கு மேல் வருவாய் ஈட்டினாலோ, பணபரிவர்த்தனைகள் மேற்கொண்டாலோ பான் கார்டு வைத்திருக்க வேண்டும். முந்தைய நிதியாண்டில் மேற்குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருவாய் ஈட்டிருந்தால், அடுத்த நிதியாண்டின் மே மாதம் 31ம் தேதிக்குள் பான் கார்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். 

3. அதேபோன்று தனி நபர் தவிர மற்ற அமைப்புகளில் பொறுப்பில் இருப்பவர்கள், இயக்குநர்கள், மேலாளர்கள், முதன்மை செயல் அதிகாரிகள், நிர்வாகிகள், நிறுவனர்கள் என அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.   

4. ஆதார் எண்ணை பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் பான் எண் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 

5. பான் கார்டுக்கு விண்ணப்பித்த அடுத்த 5வது மணி நேரத்தில் புதிய பான் அட்டை கிடைக்கும் வகையில் வருமானவரித்துறை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. 

6. இந்தியாவிலேயே வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க படிவம் 49A, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் படிவம் 49AAவும் விண்ணப்பிப்பர். இனி அந்த படிவங்களை அளிக்கும் போது ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண் (Enrolment ID) அதில் குறிப்பிடுவது அவசியம். அதே நேரத்தில் விலக்கு வருமானவரிச் சட்டப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close