காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: 3 தீவிரவாதிகள்; ஒரு ராணுவ வீரர் பலி

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 06:54 pm
kashmir-3-terrorists-and-a-soldier-killed

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரரும் இதில் கொல்லப்பட்டார். 

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் உள்ள குல்ஷன்போராவில் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். ராணுவ வீரர்கள் தங்களை நெருங்கியவுடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினர். பதிலுக்கு ராணுவமும் தாக்குதல் நடத்தியது. 

இதில் காயமடைந்த ஒரு ராணுவ வீரர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என ராணுவம் சந்தேகிக்கிறது. 3 தீவிரவாதிகளின் உடல்களையும் மீட்டு அவர்களது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close