ஆம் ஆத்மியில் இருந்து விலகினார் பிரபல வழக்கறிஞர் ஃபூல்கா!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 09:06 pm
hs-phoolka-quits-aam-aadmi-party

1984 சீக்கிய கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்காக வழக்கு தொடுத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் பிரபல வழக்கறிஞர் எச்.எஸ் ஃபூல்கா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார்.

இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து, புதுடெல்லியில், சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் வெடித்தன. இதில், 2800 சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். அரசுக்கு எதிராகவும், குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வரவும் வழக்கு தொடுத்தவர்களில் முக்கியமானவர் எச்.எஸ் பூல்கா. சுமார் 35 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இவர் சேர்ந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பின் 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், 1984 வழக்குகளில் ஆஜராக முடியாது என நீதிமன்றம் கூறியதால், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 2015ம் ஆண்டில் குரு கிராந்த் சாஹிப் எனப்படும் சீக்கிய புனித புத்தகங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக ரஞ்சித் கமிஷனின் அறிக்கையின் மீது காங்கிரஸ் ஆட்சியில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், தனது எம்.எல்.ஏ பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பாரத் ரத்னா விருதை திரும்பப் பெறுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, தான் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close