எங்கள் பிரதமரை கிண்டல் செய்வதா?: டிரம்ப்பிற்கு காங்கிரஸ் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:04 pm
congress-condemned-to-trump-regarding-mocking-pm

பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்ததற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு நூலகம் கட்டிக்கொடுக்க பிரதமர் மோடி தொடர்ந்து உதவி வருகிறார்.

இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஆப்கானிஸ்தானில் இந்தியா நூலகம் கட்டிவருகிறது. அதை அந்த நாட்டில் பயன்படுத்தக்கூடியவர்கள் எவராவது இருக்கிறார்களா என்றே தெரியவில்லை?" என கிண்டலுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு மத்திய அரசு சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறும்போது, "ஆப்கானிஸ்தான் விஷயத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பேசியுள்ள விதம் ஏற்புடையதல்ல. இதுபோன்று அவர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு  கொஞ்சமும் அழகல்ல" என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய பிரதமரை கிண்டல் செய்வதை டிரம்ப் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு உதவ அமெரிக்காவின் ஒப்புதல் எங்களுக்கு தேவையில்லை.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதில் இருந்தே, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பொருளாதார உதவிகளை செய்து வருகிறது" எனவும் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close