இலங்கை பெண்ணை போலீஸ் தடுக்கவில்லை: கேரள காவல்துறை விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 12:45 pm
the-kerala-police-confirmed-that-a-46-year-old-sri-lankan-woman-offered-prayers-at-sabarimala

இலங்கை பெண் சசிகலா சபரிமலையில் தரிசனம் செய்ய சென்ற போது அவரை போலீசார் தடுக்கவில்லை என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. இரு தினங்களுக்கு முன்பு கேரளத்தை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்தார் என்று தகவல்கள் வந்தன. ஆனால் 18 படி வரை சென்றேன் ஆனால் சாமி தரிசனம் செய்ய என்னை போலீசார்  அனுமதிக்கவில்லை என்று சசிகலா எனும் அப்பெண் கூறினார். 

அந்த பெண் சாமி தரிசனம் செய்தார் என்று தற்போது கேரள போலீசார் தெரிவிக்கின்றனர். அவர் செல்லும் போது போலீசார் அவரை தடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு தரிசனம் செய்துவிட்டு 11 மணிக்கு பம்பா வந்தார் என்று போலீசார் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு மஃப்டியில் இருந்த போலீசார் பாதுகாப்பு வழங்கி உள்ளனர். 

எனினும் அந்த பெண்ணை போலீசார் தடுக்கவில்லை என்றும், அங்கிருந்த பக்தர்கள் தான் திருப்பி அனுப்பினர் என்றும் தகவல்கள் வருகின்றன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close