5 மாநில வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jan, 2019 02:23 pm
5-states-radio-stations-to-be-closed

நிதி பற்றாகுறை காரணமாக தேசிய அளவில் செயல்படும் வானொலி மையம் உள்ளிட்ட 5 பிராந்திய மொழிகளின் வானொலி ஒலிபரப்பு சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்திய வானொலி சேவையான அகில இந்திய வானொலி, தற்போது நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தனியார் வானொலி நிலையங்களின் வரவால், அரசின் வானொலி சேவைக்கான நேயர்கள் எண்ணிக்கை பொருமளவு குறைந்துள்ளது.

இதன் காரணமாகவும், செலவினத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்,  குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு சேவை நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close