சபரிமலை புனிதப்படுத்தும் பூஜை: தேவசம் போர்டு கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 08:51 pm
devasom-board-asks-explanation-about-purification-ritual

சபரிமலை கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வழிபட்டதை தொடர்ந்து, கோவிலை புனிதப்படுத்தும் பூஜை நடத்தப்பட்டது குறித்து, கேரள தேவசம் போர்டு, சபரிமலை தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் சென்று வழிபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளா முழுவதும் இந்து அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், பெண்கள் நுழைந்ததை தொடர்ந்து, சபரிமலை கோவில் நடையை அடைத்து, கோவிலை புனிதப்படுத்தும் பூஜைகள் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில், சபரிமலை தந்திரி புனித பூஜை நடத்தியது குறித்து, கேரள தேவசம் போர்டு விளக்கம் கேட்டுள்ளது. "புனித பூஜை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அது குறித்து தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது விளக்கத்தை கேட்டபின்,  அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். விளக்கம் கொடுக்க சபரிமலை தந்திரிக்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close