உ.பி. - மணல் கொள்ளை வழக்கு: டெல்லி, லக்னோவில் சிபிஐ அதிரடி சோதனை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:14 pm
uttarpradesh-cbi-raid-in-sand-mining-case

உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பாய்ந்து செல்லும், கங்கை நதியின் ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை அடிக்கப்படுவது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி, லக்னோ, கான்பூர், ஹமிர்பூர்,  ஜலான் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம், உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக 55 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close