அந்தமானில் ‘பபுக்’ புயல் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:46 pm
cyclone-alert-for-andaman-fishers-bareed-to-go-into-sea

அந்தமான் தீவை ஒட்டிய கடல் பகுதியில் ‘பபுக்’ என்ற புயல் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவு, வங்கக் கடலின் மத்தியக் கிழக்கு, தென் கிழக்கு ஆகிய பகுதிகளில் இன்று மாலை தொடங்கி 7ம் தேதி காலை வரையில் காற்றின் அழுத்தம் மிகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகோபார் தீவுகளில் நாளை வரையில் கடல் அலை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் மத்தியக் கிழக்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய மீனவர்கள் இன்று முதல் 7ம் தேதி வரையில் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் 8ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில், கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று டிட்லி புயலால் ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close