மகா கும்பமேளாவிற்கு சிறப்பு விமானங்கள் இயக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 01:32 pm
special-flights-to-kumbamela

அலகாபாத்தில் நடக்க உள்ள மகா கும்பமேளாவிற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் பிரசித்திபெற்ற மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 30-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கோடிக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தர உள்ளனர். இந்நிலையில் கும்பமேளா செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 

இதையடுத்து வரும் ஜனவரி15-ம் தேதி முதல் டில்லி, கோல்கட்டா, ஆமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து கும்பமேளா துவங்க உள்ள பிரக்யாராஜ் நகருக்கு,  வார நாட்களான ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க உள்ளது. கும்மேளாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு, விமான கட்டணத்தில் 25 சவீதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close