ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டம்: உத்தண்டியில் நாளை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:08 pm
rss-meet-begin-at-uthandi-near-chennai-on-tomorrow


ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், சென்னையை அடுத்த உத்தண்டியில் நாளை தொடங்குகிறது.

மூன்று நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர்கள் ராம் லால், ராம் மாதவ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இருப்பினும் இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் விவகாரம், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

புத்தாண்டு தினத்தில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, "சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிப்பது உள்ளிட்ட அனைத்து  முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்" எனக் கூறியிருந்தார்.

மோடியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விஹெச்பி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், ராமர் கோயில் கட்டும் விஷயத்தில், சட்டரீதியான நடவடிக்கைகள் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடியாது என தெரிவித்திருந்தன.

இந்த நிலையில்,  உத்தண்டியில் நாளை தொடங்கவுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close