இளம் பெண்ணை சகோதரர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த பேஸ்புக் நண்பர்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:21 pm
23-year-old-woman-raped-by-facebook-friend-his-brothers-in-shamli

உத்திரபிரதேசத்தில் பேஸ்புக்கில் நட்பான பெண்ணை தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும அவர் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் சோனு என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் நண்பர்களான இரண்டாவது நாள் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை கடத்திச் சென்ற சோனு, தனது சகோதரர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சோனு மற்றும் அவர் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close