மாமியார் கொடுமை மருமகளுக்கு மட்டும் இல்லிங்கோ!

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 04:51 pm
man-suicide-due-to-wife-and-her-mom

மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் இந்துாரை சேர்ந்த,31 வயது  இளைஞர் ஒருவர்,  கடந்த ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். ஆரம்பத்தில், கணவன் - மனைவி உறவு சுமுகமாக இருந்தது. 

எனினும் சில மாதங்களுக்குப் பின், இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இந்நிலையில், கணவன் - மனைவி சண்டையின் போது, தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அந்த நபரின் மனைவி, தன் தாயை, தன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கேயே தங்கச் செய்தார். 

மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்க முடியாத இளைஞர், வீட்டிற்கு வருவதை தவிர்த்து, பணியிடத்திலேயே தங்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி, கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். 

தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக அதில் தெரிவித்தார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு எதிராக புகார் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், தான் தங்கியிருந்த தனியார் ஓட்டல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், தன் தாயின் துாண்டுதலாலேயே, கணவருக்கு எதிராக பொய் புகார் அளித்தாக தற்கொலை செய்து இறந்த நபரின் மனைவி ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து, தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

மாமியார் துாண்டுதலின் பேரில் மனைவியின் கொடுமையை தாங்க முடியாத  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் இந்துார் மக்களிடையே, அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close