'பிரச்னை பண்ணாதீங்க...அப்புறம் உங்க கதை அவ்ளோ தான்' - சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:34 pm
you-ll-be-finished-chandrababu-naidu-after-bjp-leaders-block-convoy

'என்னிடம் தேவையில்லாத பிரச்னையை உண்டு பண்ண வேண்டாம், அப்புறம் உங்க கதை அவ்வளவு தான்' என பாஜகவினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சிக்கு வந்தபோது அங்குள்ள சிலர், 'நாயுடுவே திரும்பி போ' என்று கோஷமிட்டுள்ளனர். அவரது வாகனத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போலீசார் வந்து போராட்டம்  நடத்திய சிலரை கைது செய்தனர். 

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசியபோது சந்திரபாபு நாயுடு, "என்னிடம் தேவையில்லாத பிரச்னையை உண்டு பண்ண வேண்டாம். அப்புறம் உங்கள் நிலைமை மோசமாகி விடும். இப்போது கோஷமிடும் நீங்கள் தைரியம் இருந்தால் ஆந்திர மக்கள் மத்தியில் சென்று கோஷமிடுங்கள். அவர்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close