நான் நிரபராதி...! நிரவ்மோடி நீதிமன்றத்தில் பதில் மனு !!

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 04:43 pm
iam-not-a-fraud-says-nirav-modi-to-special-court

தான் நிரபராதி என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்யவில்லை என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 13,000  கோடி ரூபாய்க்கு  மேல் கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். 

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அரசிற்கு தகவல் தந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. 

இதற்கு மத்தியில், நிரவ் மோடியை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றது சிவில் பரிவர்த்தனை மட்டுமே எனவும் மோசடி எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close