இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து; 6 சிறுவர்கள், ஓட்டுநர் பலி

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:10 am
six-students-and-driver-killed-in-himachal-bus-accident

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிரமர் பகுதியில், பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில், 10 வயது நிரம்பிய 6 சிறுவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிரமர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்ற பேருந்து, ததஹு என்ற ஊரின் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். அனைவரும் பத்து வயதே நிரம்பிய சிறுவர்கள் என கூறப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநரும் சம்பவத்தில் பலியானார். ஏழு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு 20,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் வழங்க உள்ளதாக துணை கமிஷனர் லலித் ஜெயின் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close