இந்திய பிரதமராக மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தகுதி: பாஜக தலைவர் பகிர்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:14 am
west-bengal-bjp-chief-hails-mamata-banerjee-as-prime-minister-material

மேற்கு வங்க மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிரதமராக உயர தகுதியுடைய ஒரே தலைவர், முதல்வர் மம்தா பானர்ஜி தான், என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாரதிய ஜனதா தலைவர் திலீப், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர், "எங்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக அவர் வாழ வேண்டும். ஏனென்றால் அவர் வெற்றியை பொறுத்துதான் மேற்கு வங்கத்தின் எதிர்காலமே உள்ளது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், பெங்காலில் இருந்து பிரதமராகக் கூடிய தகுதி உடைய நம்பர் 1 தலைவர் மம்தா பானர்ஜி தான்" என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து, மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சியில் பிரதமராக தகுதியுடைய தலைவர்கள் யாரும் இல்லையா எனக் கேட்டதற்கு, "இனி யாராவது வரலாம். ஆனால் தற்போதைக்கு பிரதமராக கூடிய தகுதியுடையவர்களில் மம்தா தான் நம்பர் 1" என்றார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close