மோடி மீண்டும் பிரதமராவது உறுதி : உ.பி. துணை முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 11:30 am
modi-will-come-pm-again-up-deputy-cm

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, யார், யாருடன் கூட்டணி அமைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாட்டு மக்கள் நரேந்திர மோடியின் பக்கம் இருக்கிறார்கள். அவரே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என குடிமக்கள் விரும்புகின்றனர் என உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கே.பி.மெளரியா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் எந்தக் கட்சி அமைக்கும் என்பதை தீர்மானிப்பதில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டிலேயே  அதிகமாக 80 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், பிரதான இரு கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இத்தகைய சூழலில் இந்த மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சேர்ந்தவரும், துணை முதல்வருமான மெளரியா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close