டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jan, 2019 12:19 pm
the-dust-zone-in-delhi-has-worsened


டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில், கடுமையான குளிரோடு, காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகிறது. பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும். 

ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசு கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது.

காற்றின் தரக் குறியீடு, தொடர்ந்து மூன்றாவது நாளாக அபாயகரமான நிலையில் நீடிப்பதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு இது தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close