எரிபொருள் கசிவு: உயிர் தப்பிய 150 விமானப் பயணிகள்! 

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 02:48 pm
fuel-leakage-air-india-flight-landed-at-kolkatta-airport

பாங்காக்கிலிருந்து டெல்லி நோக்கி வந்துக் கொண்டிருந்த ஏர் -இந்தியா விமானத்தில் திடீரென எரிபொருள் கசிந்ததையடுத்து, அந்த விமானம் நேற்றிரவு கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகளின் சமயோஜிதமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும்  உயிர் தப்பினர்.

150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஏர்-இந்தியா விமானம் நேற்றிரவு 9:30 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்,  தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அதில் எரிபொருள் கசிவது விமானிகளுக்கு தெரிய வந்தது. அப்போது விமானம் கொல்கத்தா அருகே பயணித்துக் கொண்டிருந்ததால், உடனே, அந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் விமானிகள் தொடர்பு கொண்டனர். 

அதையடுத்து அவர்கள் அனுமதியளித்ததையடுத்து, சிறிது நேரத்தில் விமானம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

newtm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close