உலக சாதனை முயற்சி - 3,000 கிலோவில் அரிசி உப்புமா தயாரிக்கும் பா.ஜ.க.

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:13 pm
bjp-to-cook-3000-kg-kichadi-for-amit-shah-rally-in-delhi

டெல்லியில் இன்று மாலையில் நடைபெறும் தலித் மக்கள் மாநாட்டில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ளார். அதையொட்டி, தலித் வீடுகளில் இருந்து அரிசி, மசாலா பொருள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அனைவருக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 3,000 கிலோ அளவில் அரிசி உப்புமா செய்யப்படவுள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இந்த உணவு பகிர்ந்தளிக்கப்படும். மூன்றாயிரம் கிலோவில் உப்புமா தயாரிப்பது உலக சாதனை முயற்சியாக கருதப்படுகிறது. இதற்கு  முன்பு, கடந்த 2017ம் ஆண்டில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 918 கிலோ உப்புமா செய்யப்பட்டதே உலக சாதனையாக இருந்து வருகிறது.

தலித் மக்கள் மாநாட்டில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உரையாற்றவுள்ளார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தலித் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை அமித் ஷா பட்டியலிடவுள்ளார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close