இட்லியின் நீண்ட வரலாறு!

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jan, 2019 12:19 pm
detail-history-of-idli

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளில் இட்லி முதன்மையாக உள்ளது. தமிழர்களுக்கு சாம்பார் இட்லியை தெரியும், குஷ்பு இட்லியை தெரியும். ஆனால் இட்லியின் வரலாறு பெரும்பாலனவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வரலாறு மிக முக்கியம். வாருங்கள் அதை தெரிந்து கொள்வோம்.

வரலாறு
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு வகையாகும்.

இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக்  பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன. 

பண்டைய கால இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க, இன்று இட்லிக்கு பெயர்பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. 

மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம் , பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. 

மருத்துவ குணம்

மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடைகொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி வகைகள்- தட்டே இட்லி (கர்நாடகா), முதே இட்லி (மங்களூர்), ரவா இட்லி (கர்நாடகா), தவிர தமிழ்நாட்டில் 
சன்னாஸ் இட்லி (கோவை), காஞ்சிபுரம் இட்லி, மதுரை இட்லி, ராகி இட்லி, செட்டிநாடு இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, குட்டி இட்லி, பொடி இட்லி உள்பட பல்வேறு வகைகளில் இட்லி உள்ளன.

நாடுகள்

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, அமாெிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இட்லி வகைகள் கிடைக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close