'கேட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 11 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:05 pm
cat-result-2018-engineers-top-the-chart

'கேட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதையடுத்து, இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர 'கேட்' (CAT) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான தேர்வு ஐ.ஐ.எம்- ஆல் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி நாடு முழுவதும் கேட் தேர்வு நடத்தப்பட்டது. 

நாடு முழுவதும் 147 நகரங்களில், 2.09 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 11 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் 11 பேருமே ஆண்கள் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி பிரிவில் இருந்து வந்துள்ளனர். 

இதுதவிர 21 பேர் 99.99% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த 21 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவர். மேலும், இந்த 21 பேரில் 19 பேர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற 70% பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இதனால் கட்-ஆப் மார்க் கூட வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. சென்னை அசோக் நகரை சேர்ந்த எஸ்.ஆகாஷ்

கேட் தேர்வில் வாங்கும் மதிப்பெண் டிச. 31, 2019 வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. கேட் தேர்வு முடிவுகளை காண iimcat.ac.in என்ற இணையதளத்தை காணவும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close