சந்திரபாபு நாயுடுவை சாடிய பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jan, 2019 03:46 pm
pm-modi-slams-chandrababu-naidu

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததன் மூலமாக தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் என்.டி.ஆர்-ன் முதுகில் சந்திரபாபு நாயுடு குத்தி விட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆந்திர பிரதசே மாநில பாஜக தாெண்டர்களுடன் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தெலுங்கு மக்களின் அடையாளமாக விளங்கியவர் என்.டி.ஆர் என்றும் தெலுங்கு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத காங்கிரஸ் கட்சியை கடைசி வரை எதிர்த்து போராடியவர் என்.டி,ஆர் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 1982ம் ஆண்டு என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவினார். மூன்று முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்த தெலுங்கு தேச கட்சியில் 7 வருடம் முதலமைச்சராக இருந்தவர் என்.டி.ஆர் என்றார்.

மேலும் காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு தல‌ைை‌ம வகித்தவர் அவர் என்றும் ஆனால் இன்றோ அவருடைய மருமகனான சந்திரபாபு நாயுடு காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார் என்று குறிப்பிட்டார். என்.டி.ஆர்-ன் கனவான சுவர்ண ஆந்திரா ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வளர்ச்சிக்காக இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close