சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சி.ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:25 pm
crpf-soldiers-opens-fire-at-colleagues-and-kills-himself

ஜம்மு காஷ்மரில் உள்ள இந்திய துணை ராணுவப்படை தளத்தில், சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் சக வீரர்களுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, இருவரை துப்பாக்கியால் சுட்டார். பின்னர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள பந்தா சவுக் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் கேம்ப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, முகேஷ் பாபு என்ற வீரர், கோபத்தில் தனது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கழிப்பறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட அவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

"தனது சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர், கழிப்பறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு, தனது ஆயுதத்தாலேயே தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்" என காவல்துறை தெரிவித்துள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close