"நெட்" தேர்வு முடிவுகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 04:04 pm
net-exam-results-declared

தேசிய அளவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட " நெட்" தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கு நெட் தேர்வில்  தேர்ச்சி பெறுவது அவசியம். இதுநாள்வரை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) இந்தத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வந்தது.

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை முதல்முறையாக இத்தேர்வை கடந்த மாதம் 18 தேதி முதல் 22 -ஆம் தேதி வரை, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 235 நகரங்களில் இத்தேர்வை நடத்தியது.

இத்தேர்வு முடிவுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  ntanet.nic.in -இல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு முடிவுகள் ஜனவரி 10 -ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close