பா.ஜ தலைவர் விஜய் கோயலை சந்தித்தது ஏன்? - பூல்கா விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:21 pm
no-news-in-meeting-vijay-goel-phoolka

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய முன்னாள் பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவர் எச்.எஸ் பூல்கா, பா.ஜ.க தலைவர் விஜய் கோயலை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு தான், என பூல்கா ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்து பதவிவிலகிய பிரபல வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். 1984 சீக்கியர்கள் படுகொலைக்காக நீதி கேட்டு போராடி வரும் பூல்கா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமார், 1984 கலவர வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் நாத் மற்றும் ஜெகதீஷ் டைட்லர் ஆகியோருக்கும் தண்டனை கிடைக்கும் வரை நீதிக்கான தங்களது போராட்டம் தொடரும் தெரிவித்தார். சமீபத்தில், ராஜீவ் காந்தியின் பாரத் ரத்னா விருதை திரும்ப பெறுவது குறித்து டெல்லி சட்டமன்றத்தில் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி  கட்சியில் இருந்து பூல்கா விலகினார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் விஜய் கோயலை, பூல்கா அடிக்கடி சந்தித்து வந்தார். இதனால் அவர் பாரதிய ஜனதாவில் இணையவுள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், அதை பூல்கா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "விஜய் கோயலை சந்தித்தது செய்தி இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் அடிக்கடி சந்திப்போம். நான் எதிர்க்கட்சித் தலைவராக ஆனபோது, எனக்கு அவரது இல்லத்தில் விருந்தளித்தார். 1984 கலவர வழக்கில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அனைத்து தலைவர்களையும் நான் சந்திப்பேன்" என எழுதினார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close