பாஜக 300 இடங்களை கைப்பற்றும்: அமித்ஷா ஆருடம்

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jan, 2019 05:35 pm
bjp-will-win-in-300-seats-amith-shah

வரப்போகும் நாடாளுமன்ற ‌தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்த பின் தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களை காங்கிரசிடமிருந்து பாஜக மீட்டுள்ளது. தற்போது நாட்டில் பிரதமர் மோ‌டி அலை வீசி வருகிறது.

வரப்போகும் பொதுத்தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பி.க்களையும், மேற்குவங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பி.க்களையும் பெற்று பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close