மேகாலயா: 2 சுரங்கப் பணியாளர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 06:10 am
meghalaya-2-miners-dead-in-another-mine-collapse

மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப் பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த சுரங்கம் வெள்ளத்தால் மூடப்பட்டு, 15 பேர் சிக்கிய நிலையில், மற்றொரு சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதில், இரண்டு சுரங்கப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப் பகுதியில், பல இடங்களில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் தோண்டப்பட்டு இயங்கி வருகின்றன. கடும் மழை காரணமாக கடந்த மாதம் ஒரு சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பணியாளர்கள் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். சுமார் 370 அடி ஆழத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில், பல்வேறு பாதைகள் இருப்பதால், மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளன. நவீன பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றி 25 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவர் மட்டுமே உள்ளே செல்லக் கூடிய அளவுக்கு இருக்கும் சிறிய சுரங்கங்கள், 'எலிப்பொந்து சுரங்கங்கள்' என அழைக்கப்படுகின்றன. அதுபோன்ற ஒரு சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த போது, சுரங்கம் நிலைகுலைந்து பாறைகள் அவர்கள் மீது விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மிகவும் ஆபத்தான எலிப்பொந்து சுரங்கங்கள் மீது, கடந்த 2014ம் ஆண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், வேறு வேலைகள் கிடைக்காததால், மேகாலயாவின் பல பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தான சுரங்கங்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து இயங்கி வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close