ஒடிசா- சாலை விபத்தில் 5 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jan, 2019 01:44 pm
odhisha-5-dead-in-road-accident

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒடிசா மாநிலம் கேந்தரபடா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 5-ல் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்ப்பட்டு மருத்துவம‌னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்‌டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் ‌அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close