ரயில் பயணிகள் உஷார்! இனி கால தாமதம் கூடாது

  விசேஷா   | Last Modified : 07 Jan, 2019 02:07 pm
rail-passenger-alert


ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக,  பயணிகள் இனி, ரயில் புறப்படுவதற்கு, 20 நிமிடங்கள் முன்னதாகவே, ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். 

இது குறித்து, ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் பயணியர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம். விமான நிலையங்களில் உள்ளது போல், உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் அனைத்து ரயில் நிலையங்களையும் கொண்டும் வரும் முயற்சி நடந்து வருகிறது.

முதல்கட்டமாக, விரைவில் கும்பமேளா நடக்கவுள்ள உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில், ரயில் நிலைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. 

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே, பயணிகளும், அவர்களின் பொருட்களும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும். 

இதே போன்ற நடவடிக்கைகளை, 200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். 

விமான நிலையம் போல், இரண்டு மணி நேரங்களுக்கு முன் பயணிகள் வரத் தேவையில்லை. 15 - 20 நிமிடங்களுக்கு முன் வந்தால் போதுமானது. 

இந்த நடவடிக்கையால், ரயில் பயணிகளுக்கு சிரமம் ஏதும் ஏற்படாது. அதிக அளவிலான ஆர்.பி.எப்., வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close