விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:17 pm
pm-modi-wishes-to-team-india-for-winning-the-test-series-and-made-a-record

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று மழையால் கைவிடப்பட்டதையடுத்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

72 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதையடுத்து, இந்திய அணிக்கு பல்வேருட் தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "விராட் கோலி மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டையும் திறம்பட செய்துள்ளது. இது தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

— President of India (@rashtrapatibhvn) January 7, 2019

அதேபோன்று பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். கடினமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. இதன்மூலம் சிறப்பான தருணங்களை கடின முயற்சியின் மூலம் பெற்றுள்ளது. எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close