ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன ஒப்பந்த விவகாரம்- நிர்மலா சீதாராமன் விளக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jan, 2019 05:19 pm
rafel-issue-defence-minister-clarrifies

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு பணிகள் வழங்கியது மற்றும் வழங்க உள்ள பணிகள் மற்றும் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று முன்தினம் தெரிவித்த கருத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலும், ஏனைய ஊடகங்களும் சர்ச்சையாக்கினர்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வாயிலாக பணிகள் ஏதும் வழங்கப்படவில்லை. பணிகள் வழங்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் மக்களவையில் பொய் கூறியுள்ளார். அதற்கு பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.  

இந்நிலையில் இது குறித்து மக்களவையில் இன்று பேசிய நிர்மலா சீதாராமன், 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை, 26,570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஹெச்.ஏ.எல் நிறுவனம் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளது என்றும், மேலும் கூடுதலாக 73,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன' என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து,  இந்த விளக்கம் மூலம்  அவர் முன்னர் ஆற்றிய உரையின் மீது  எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக்கொண்டு அவரது உரையை முடித்துக்கொண்டார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணிகள் மற்றும் அதன் மதீப்பீடுகள் குறித்த பட்டியலையும் . நிர்மலா சீதாராமன், மக்களவையிலும், அவரது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.

.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close