கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு மலர்துாவி வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 05:37 pm
kumbh-mela-at-uttar-pradesh

 

உத்தர பிரதேச மாநிலம் கங்கை கரையில் இம்மாதம் துவங்கி, மார்ச் வரை நடக்கவுள்ள கும்பமேளாவின் முக்கிய நாட்களில், புனித நீராட வரும் பக்தர்கள் மீது மலர் துாவி, அவர்களை வரவேற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

உத்தர பிரேதச மாநிலம் அலகாபாத் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில், இம்மாதம் துவங்கி, மார்ச் வரை அர்த்த கும்பமேளா நடக்கவுள்ளது. இதில், பங்கேற்று, கங்கையில் புனித நீடார நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும், ஹிந்துக்கள் ஒன்று கூறுவர்.

பக்தர்களின் வசதிக்காக, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இந்நிலையில், மகர சங்கராந்தி நாளான, ஜன.,15; தை பவுர்ணமி - ஜன.,21; தை அமாவாசை- பிப்., 4; வசந்த பஞ்சமி - பிப்., 10;  மாசி மாத பவுர்ணமி நாளான, பிப்.,19 மற்றும் மகா சிவராத்திரி நாளான, மார்ச் 4 ஆகிய நாட்களில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வரும் பக்தர்களை, மலர் துாவி வரவேற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பா.ஜ.,வை சேர்ந்த மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close