2018-19ல் இந்திய ஜிடிபி வளர்ச்சி 7.2%!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 07:41 pm
india-s-gdp-to-grow-at-7-2-in-2018-19

2017-18 நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, வரும் நிதியாண்டில் 7.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய புள்ளியியல் ஆணையம், 2018-19ம் ஆண்டிற்கான முதல் தேசிய வருவாய் எதிர்பார்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக வளர்ச்சியடைந்ததாகவும், வரும் நிதியாண்டில் அது 7.2 சதவீதமாக வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ரிசர்வ் வங்கி, 7.4 சதவீதமாக ஜிடிபி வளர்ச்சியடையும் என தெரிவித்திருந்த நிலையில் பல பொருளாதார வல்லுநர்கள் அது குறையும் என கணித்திருந்ததினர். உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவை போன்ற துறைகளில் வளர்ச்சி மந்தமானதால், இந்த அறிக்கையின் மூலம் வல்லுனர்களின் கணிப்பை, மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close